மதுரையில் ஜூன் 22-ந் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் மதுரை மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. Madurai Murugan Devotees’ Meet
இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ந் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது, 52 நிபந்தனைகள் விதித்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி அளித்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கலக்க கூடாது என அறிவுறுத்தியது நீதிமன்றம். மேலும், இந்த மாநாட்டில் அறுபடை வீடு மாதிரி அரங்கு அமைக்கவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.