மதுரை மெட்ரோ: செயல்திட்ட அறிக்கை டெண்டர் ஒதுக்கீடு!

Published On:

| By Monisha

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ளதைப் போலவே மதுரை மற்றும் கோவை நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்காக இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 8,500 கோடியும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.9,000 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது,

மேலும், மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆர்.வி.ஆசோசியேட் நிறுவனத்திற்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

ராகுல் தகுதிநீக்கம்: தடையை மீறி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்!

காங்கிரஸ் போராட்டம்: டெல்லியில் அனுமதி மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share