மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீர்? – வானதி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vanathi

மதுரை மீனாட்சி அம்மன் குட முழுக்கு நிகழ்வுகளில் பங்கேற்க வந்தவர்கள் மீது பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாக கூறப்படும் நிலையில் பக்தர்களின் வழிபாட்டு நம்பிக்கை உணர்வுகளைப் விஜய் தலைமையிலான தவெக அரசு புண்படுத்தி உள்ளதாக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளர்.

இதுகுறித்த அவர் தனது எக்ஸ் பதிவல், “17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழா, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப்பட்ட புனித நிகழ்வாகும். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவில், பக்தர்களின் உணர்வுகளையும் ஆன்மிக நம்பிக்கைகளையும் மதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது.

ADVERTISEMENT

பக்தர்களை முறையாக வழிநடத்தாமல், நீண்ட நேரம் கால் கடுக்கக் காத்திருக்கச் செய்து, கூட்ட நெரிசலுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியதாக பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது முற்றிலும் அரைகுறையான ஏற்பாடுகளையே காட்டுகிறது.

மேலும் தங்கள் மீது புனித நீரின் ஒரு துளியாவது விழுந்தால் புண்ணியம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த பக்தர்களுக்கு, காவல்துறையினர் புனித நீர் எனக் கூறி பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவம் கண்டனத்திற்குரியதாகும்.

ADVERTISEMENT

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தகைய புனித நிகழ்வில், ஒவ்வொரு ஏற்பாடும் பக்தர்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதை முற்றிலும் தவற விட்டிருக்கிறது தவெக அரசு. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருளைப் பெற வந்த பக்தர்களுக்கு தவெக அரசின் அலட்சிய ஏற்பாடுகளும், அவமதிப்புமே பரிசாகக் கிடைத்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share