அங்காளி, பங்காளி ரெடியா? – மதுரை முத்தையா கோவில் கிடா விருந்து எப்போது?

Published On:

| By Selvam

மதுரை மாவட்டம் அனுப்பப்பட்டி அருகே உள்ள சொரிக்காம்பட்டி கரும்பாறை முத்தையா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிடா வெட்டு சமபந்தி விழா நடைபெறும்.

முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி, 2500 கிலோ உணவு சமைத்து பொதுமக்களுக்கு படையல் விருந்து அளிக்கப்படும். திருவிழாவிற்காக கருப்பு கிடாக்களை ஊர்மக்கள் காணிக்கை அளிப்பார்கள்.

இதில் கரடிக்கல் செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொள்வார்கள். கரும்பாறை முத்தையா சாமிக்கு உருவம் இல்லாததால் அங்கு சமைக்கப்பட்ட உணவை குவித்து வைத்து கறிக்குழம்பு ஊற்றி படையல் போடுவார்கள். பின்னர் சிறப்பு பூஜை நடைபெறும்.

இதனை தொடர்ந்து அங்கு வரும் ஊர்ப்பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த ஆண்டு கிடா வெட்டும் சமபந்தி விழா நாளை (மே 18) நடைபெற உள்ளது. இந்த விழா தொடர்பான அழைப்பிதழ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் கிளைமேட் எப்படி? வானிலை மையம் ஜில்ஜில் அப்டேட்!

அடுத்த படத்தில் டூயட்… கரகாட்டக்காரன் 2 வருமா?: சுவாரஸ்யம் பகிர்ந்த ராமராஜன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share