சங்கரய்யா விவகாரம்: பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள்!

Published On:

| By Selvam

madurai kamaraj university convocation sankaraiah

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை 15-க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 2) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க சிண்டிகேட், செனட் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி சங்கரய்யாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஒப்புதல் அளிக்கவில்லை.

ADVERTISEMENT

இதன்காரணமாக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று (நவம்பர் 1) அறிவித்தார். ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் இன்று கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. சி. ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!

கேரள ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!

’புதியவர்கள் வரட்டும்’: விஜய்யின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share