வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… பக்தர்கள் பரவசம்!

Published On:

| By christopher

Kallaghagar came to Vaigai river!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரு விமரிசையாக இன்று (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 21ஆம் தேதி மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதன்பின்னர் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வடம் இழுக்க மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் விமரிசையாக நடந்தேறியது.

இதற்கிடையே மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் மதுரைக்கு பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று புறப்பட்டார்.

இந்நிலையில் முக்கிய நிகழ்வான  சித்திரா பவுர்ணமிநாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்றுஅதிகாலை நடைபெற்றது.

முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். அப்போது அவரை தரிசிக்க கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’  என எழுப்பிய முழக்கம் விண்ணை முட்டியது. மேலும் வைகையாற்றில் இறங்கிய பக்தர்கள் பக்தியுடன் ஆடிப்பாடி அழகரை வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து வரும் 27ஆம் தேதி அன்று அழகர்கோவிலுக்கு திரும்புகிறார் கள்ளழகர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஹெல்த் டிப்ஸ்: நலம் தரும் நடைப்பயிற்சி… சில முக்கிய குறிப்புகள்!

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற காலணிகள் எது?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கலர் காஜா ரோல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share