மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெறும் ’தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பிலான முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ36,660.35 கோடி முதலீட்டுக்கான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின்றன.
மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு வளர்கிறது” எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் ரூ36,660.35 கோடி முதலீடுகள் பெறப்படும். இம்முதலீடுகளால் 56,766 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலூரில் புதிய சிப்காட் தொழிற்சாலைக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில்
- 63, 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது.
- ரூ.3,065 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் திறப்பு மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
- மதுரை மேலமடை சந்திப்பில் ரூ150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
