தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
மதுரை கிழக்கு வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மதுரை கிழக்கு தொகுதி.. அமைச்சர் மூர்த்தி களம் காண்கிற தொகுதி.. சிபிஎம் மூத்த தலைவர் சங்கரய்யா 2 முறை ஜெயிச்ச தொகுதி.
அதிமுக மூத்த தலைவர் காளிமுத்துவும் இங்கே போட்டியிட்டு ஜெயிச்சிருக்காரு.
சிபிஎம்-ல் எளிமையான எம்.எல்.ஏ.வாக அறியப்பட்ட நன்மாறனும் 2 முறை ஜெயிச்ச தொகுதி இது.
2016, 2021-ல் அமைச்சர் மூர்த்தி, அதிகமான வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்சிருந்தாரு.
இந்த முறையும் அமைச்சர் மூர்த்தி களம் காண்கிறார்.
அதிமுகவில மாங்குளம் மகேந்திரன் வேட்பாளரா நிற்கிறார்.. புதுமுகமாக இருந்தாலும் திமுகவுக்கு ரொம்பவே குடைச்சல் கொடுத்த மதுரை மாநகராட்சி முறைகேடு வழக்குகளை நடத்தினவர் இந்த மாங்குளம் மகேந்திரன்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 43%
அதிமுக கூட்டணி-35%
தவெக-12%
நாதக-9% வாக்குகள் பெறும்
அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்









