மன்னிப்பு வீடியோ… யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

Published On:

| By indhu

Madurai: Bail for YouTuber TTF Vasan!

செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதாக நேற்று (மே 29) இரவு கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு இன்று (மே 30) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதுத்தொடர்பாக கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் நேற்று இரவு மதுரை அண்ணாநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கைதான டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில், “வாகனத்தை வேகமாக ஓட்டவில்லை. டிடிஎஃப் வாசன் படத்தில் நடிக்க உள்ளார். அவர் பதிவிட்ட வீடியோவிற்காக மன்னிப்பு கேட்கிறோம். தலைக்கவசம் வழங்குவது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவது போன்ற நன்மைகளை செய்து வருகிறார்” என்று வாதிடப்பட்டது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, “கார் ஓட்டுநர் உரிமம் பெற எல்எல்ஆர் மட்டுமே வைத்துள்ள வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டியுள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்ற வாதம் முன்வைக்கட்டது.

இதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும், வரும்காலங்களில் இதுபோன்று அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் என்று தனது யூடியூப் தளத்தில் வாசன் மன்னிப்பு வீடியோ வெளியிட உத்தரவிட்டார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மழை வர போகுதே – வானிலை மையம் கூல் அப்டேட்!

குமரிக்கு வரும் மோடி: பாதுகாப்பு பணியில் யார் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share