கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாமனார் உயிரிழப்பு!

Published On:

| By Minnambalam

மதுரை எய்ம்ஸ் தலைவரும், தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாமனாருமான நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த 22ம் தேதி மூளை நரம்பியல் மருத்துவரான நாகராஜனை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நியமித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், திடீரென நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாகராஜன் உயிரிழந்தார். இவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நாகராஜன் மறைந்த செய்தியை அவரது மருமகனும், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

டெல்லி செல்லும் ஆளுநர் ஆா்.என்.ரவி

பொம்மைகள் பறிமுதல்: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் !

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share