தமிழக காவல் நிலையங்களில், கைது செய்யப்படும் கிரிமினல்கள் கழிவறைகளில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி மாவுக்கட்டு போடும் விவகாரத்தில் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகளான ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது போலீசாரை கடுமையாக எச்சரித்தனர்.
அப்போது, கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்படுகிற நபர்கள் மட்டுமே காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகளில் வழுக்கி விழுந்து கை கால்கள் உடைகின்றன; ஆனால் அந்த கழிவறைகளைப் பயன்படுத்தும் போலீசாருக்கு எதுவுமே நடப்பதில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது; இத்தகைய போக்கு தொடரும் நிலையில் சில போலீசாரின் வேலை பறிபோகும் என்றும் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் பெஞ்ச் எச்சரிக்கை விடுத்தது