திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி

Published On:

| By Mathi

Thirupparankundram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்அ னுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை இந்துத்துவா அமைப்புகள் முன்னெடுத்தன. மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்பதும் இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கை.

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், டிசம்பர் 3-ந் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share