சென்னை உயர்நீதிமன்றம் – மூன்று புதிய நீதிபதிகள்!

Published On:

| By Balaji

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஆறு புதிய நீதிபதிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவியேற்பு இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேலும் 3 நீதிபதிகள் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். எச்.ஜி.ரமேஷ்,ராமமோகன ராவ் மற்றும் ராஜிவ் சக்தர் ஆகியோரே அந்த புதிய நீதிபதிகள். இவர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நீதிபதிகளையும் சேர்த்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்கிறது.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share