தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக யூ டியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. Madras High Court dismisses Savukku Shankar’s CBI Probe Plea against Selvaperunthagai
தூய்மை பணியாளர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் மற்றும் மத்திய அரசின் NAMSTE திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பிருப்பதாகவும் கூறி சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது, முறைகேட்டில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பிருப்பது உறுதியானால் தமிழக அரசுக்குதான் சிக்கல் எனவும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரின் மனுவை இன்று தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், தூய்மைப் பணியாளர்களுக்கே இந்த திட்டங்கள் சென்றடைவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.