சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை… மாதம் ரூ.65,500 வரை சம்பளம்! டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

madras high court aso recruitment 2026 degree holders job chennai

“கோர்ட் வேலைன்னா கெத்துதான்… அதுவும் ஹைகோர்ட் வேலைன்னா சொல்லவா வேணும்?” சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) நிரந்தரப் பணியில் சேர்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது.

உயர் நீதிமன்றச் சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் (HCLSC) காலியாக உள்ள ‘உதவிப் பிரிவு அலுவலர்’ (Assistant Section Officer – ASO) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெறும் 4 இடங்கள்தானே என்று சலித்துக் கொள்ள வேண்டாம்… போட்டி குறைவா இருக்கும், முயற்சி செய்தால் இந்த வேலை உங்களுக்குத்தான்!

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்த வேலைக்கு விண்ணப்பிக்கச் சில நிபந்தனைகள் உள்ளன.

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
  • டைப்ரைட்டிங்: இதுதான் முக்கியம்! ஆங்கிலத்தில் முதுநிலை (English Higher) மற்றும் தமிழில் இளநிலை (Tamil Lower) தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கம்ப்யூட்டர் அறிவு: கணினி இயக்குவதற்கான அடிப்படை அறிவு (Computer Proficiency) அவசியம்.

சம்பளம் எவ்வளவு?

ADVERTISEMENT

“சம்பளத்தை கேட்டா சும்மா அதிருதுல!” தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, தமிழக அரசின் ஊதிய விகிதப்படி (Level-10) ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதுபோகப் பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி என அரசு ஊழியர்களுக்கான அத்தனை சலுகைகளும் உண்டு.

வயது வரம்பு:

ADVERTISEMENT
  • குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்சம்: பொதுப் பிரிவினருக்கு 30 வயது. (பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினருக்கு 32 வயது, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 35 வயது வரை தளர்வு உண்டு).

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Exam) – 100 மதிப்பெண்கள்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு.
  • நேர்முகத் தேர்வு (Viva-voce).

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment_rf/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் சுய விலாசமிட்ட உறை ஆகியவற்றை இணைத்து, “செயலாளர், உயர் நீதிமன்றச் சட்டப் பணிகள் ஆணைக் குழு, சென்னை உயர் நீதிமன்ற வளாகம், சென்னை – 600 104” என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: பிப்ரவரி 10, 2026 (மாலை 5 மணிக்குள்).

குரூப்-2 தேர்வுக்குப் படிக்கிறவங்களுக்கு இது ஒரு ஈஸியான சான்ஸ். ஏன்னா சிலபஸ் கிட்டத்தட்ட ஒண்ணுதான். அதுவும் டைப்ரைட்டிங் முடிச்சவங்களுக்குத் தனி மவுசு இருக்கு. மொத்தமே 4 சீட் இருந்தாலும், அதுல ஒண்ணு நம்ம சீட்னு நினைச்சு தைரியமா அப்ளை பண்ணுங்க. சென்னைக்குள்ளயே ஹைகோர்ட் கேம்பஸ்ல வேலை பாக்குறது பெரிய கௌரவம் பாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share