‘அதிமுக பொதுச்செயலாளர்’ தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
2022ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் போது எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், தற்போது பதில் மனுத்தாக்கல் செய்தபோது அதிமுக பொதுச்செயலாளர் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், ‘முன்னதாக எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் என பதில்மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஓபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உங்களை எப்படி பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி தரப்புக்கு கேள்வி எழுப்பியது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இதையடுத்து மனுவை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷின் ‘ராயன்’ பந்தயம் அடித்ததா? ட்விட்டர் விமர்சனம் இதோ!
அமித்ஷா குறித்து அவதூறு : நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி