கேசவ விநாயகத்தை சிபிசிஐடி விசாரிக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

Published On:

| By Selvam

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 24) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்னையில் இருந்து நெல்லை புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3.99 கோடியை தாம்பரம் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

பணத்தை எடுத்துச் சென்றவர்கள் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனன், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.

ADVERTISEMENT

இதனை எதிர்த்து கேசவ விநாயகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது கேசவ விநாயகன் தரப்பில், “பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

சிபிசிஐடி போலீசார் தரப்பில், “கேசவ விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்யாத நிலையில்,  வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கேசவ விநாயகத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு

சவுக்கு சங்கரின் குண்டர் சட்ட வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு?

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share