பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு, நடவடிக்கைகள் உள்ளதாக நடிகர் மாதவன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
நடிகர் மாதவன் பங்குதாரராக உள்ள ‘பேரண்ட் Army (Parent Geenee )என்கிற செயலியின் அறிமுக விழா சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடந்தது இந்தச் செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு அலையும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில், இந்தச் செயலி கண்காணித்து பெற்றொருக்கு தகவல் கொடுக்கிறது. இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது. madavan speach about childrens
இந்த செயலியை அறிமுகப்படுத்தி நடிகர் மாதவன் பேசுகையில், “ஒரு பெற்றோராக இன்று ஊடகங்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள்.பெற்றோரை விட சமூக ஊடகங்கள் மூலமே குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.எப்போதும் திரை பார்த்துக் கொண்டிருப்பது, சமூக ஊடகங்களில் உலவும் குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.

என் மகனைத் தேடி நாலைந்து நண்பர்கள் வருவார்கள். அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் ? என்று என் மனைவியிடம் கேட்பேன். அவர்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள் என்று அவர் சொல்வார். அந்த ஐந்து பேரும் ஒரு தனி அறையில் இருந்தால் கூட அவர்கள் தனித்தனியான உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். ரீல்ஸ் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று நேரத்தை செலவழிக்கிறார்கள். அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொள்வதே இல்லை.பேசுவதும் கேட்காது. ஏனென்றால் ஹெட்செட் அணிந்திருக்கிறார்கள்.இந்தியாவில் இருக்கும் ஐந்து பேர் நெதர்லாந்திலோ ரஷ்யாவிலோ இருக்கும் ஐந்து பேருடன் வீடியோ கேமில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் ‘போர்ட் நைட்’ என்ற ஒரு கேமை விளையாடுகிறார்கள்.இது என்னை மிகவும் பாதித்தது.madavan speach about childrens
குழந்தைகள் ஸ்கிரீனில் செலவழிக்கும் நேரம் , சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரம், அதனுடைய பாதிப்புகள் பற்றி பேச வேண்டும். இதன் உளவியல் தாக்கங்கள் என்ன? இதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்… இது குடும்ப அமைப்பை எப்படி பாதிக்கிறது? இதைத்தான் நான் உங்களுடன் பேசப் போகிறேன்.

அப்போதெல்லாம் ஒரு பள்ளியில் வகுப்பில் 40 பேர் இருந்தால் நமக்கு என்ன அங்கீகாரம் என்று நினைத்தார்கள் .நமது தனித்துவம் என்ன? நமக்கான அடையாளம் என்ன என்பதைப் பற்றி யோசித்தனர். குறிப்பாக 20 பேருக்கு நம்மை ஊரில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இப்போது உங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் போட்டி நடத்துகிறார்கள்; மோதுகிறார்கள். வீடியோ போட்டு வேலிடேஷன் தேடுகின்றனர்.madavan speach about childrens
இளைஞர்கள் பிரபலமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு லைக் எவ்வளவு டிஸ்லைக் என்பதைக் கூட கேட்கிறார்கள். அவர்கள் அடையாளம் இல்லாமல் தனிமையாக உணர்கிறார்கள் .இந்த தனிமை ஒரு மனச்சோர்வை உண்டாக்குகிறது அதனால் தான் ‘ப்ளூ வேல் ‘போன்றவை வந்தன. ‘ப்ளூ வேல் ‘ இளைஞர்களை தற்கொலை வரைகொண்டு போனது. கட்டிடங்களிருந்து பெண்கள் குதித்தனர். ஆண்கள் வெட்டிக் கொண்டார்கள். அது ஒரு பயங்கரமான காலமாக இருந்தது .அந்த காலத்தில் எனக்கு ஒரு குழந்தை இருந்தால் அதன் நிலை என்னவாகும்? என்று யோசித்த போதே பயம் வந்தது. அதன் விளைவாகவே , இப்படி ஒரு செயலியை உருவாக்க என்னை முனைய வைத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
