‘மாயி’ சூர்யபிரகாஷ் மறைவு!

Published On:

| By Kavi

மாயி, திவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சூர்யபிரகாஷ் இன்று(மே 27) காலமானார்.

கடந்த 1996-ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். இப்படத்தில் நடிக்க நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு கோடி சம்பளம் பெற்ற நடிகர் என்கிற பெருமை ராஜ்கிரணுக்கு கிடைத்தது.

ADVERTISEMENT

இந்த படத்தை தொடர்ந்து சரத்குமார், மீனா நடிப்பில் வெளியான மாயி படத்தை இயக்கினார் சூர்யபிரகாஷ். மாயி படம் பெரிய ஹிட் கொடுத்தது.

தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் திவான் படத்தை இயக்கினார். 2015ல் அதிபர் படத்தை இயக்கினார். அவர் இயக்கிய வருஷநாடு என்ற படம் இன்னும் வெளிவராமல் உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (மே 27) காலை சூர்யபிரகாஷ் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன.

அவரது மறைவை உறுதிப்படுத்தி, இரங்கல் தெரிவித்துள்ள நடிகரும் அரசியல் வாதியுமான சரத்குமார், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய நண்பர் சூர்யபிரகாஷ் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

ADVERTISEMENT

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Share Market : டிவிஎஸ் மோட்டார் முதல் அதானி போர்ட்ஸ் வரை இன்றைய வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள்!

ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி : 35 பாலஸ்தீனியர்கள் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share