டாம்க்ரூஸ் Maareesan vs Thalaivan Thalaivi Movie
தமிழ் திரையுலகத்திற்கு என்ன ஆனதென்று தெரியவில்லையே என அதைச் சார்ந்தவர்களே திகைக்கிற அளவுக்குக் கடந்த சில வாரங்களாக வெளியாகும் திரைப்படங்களின் உள்ளடக்கம் இருந்து வருகின்றன. கவலைப்பட ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக வந்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தந்து வருகின்றன. மெட்ராஸ் மேட்னி, டிஎன்ஏ, குட் டே, லவ் மேரேஜ், மார்கன், திருக்குறள், பறந்துபோ, 3 பிஹெச்கே, பீனிக்ஸ், அஃகேனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவற்றில் சில படங்கள் ரசிகர்களின் முழு ஆதரவைப் பெற முடியாமல் தியேட்டரை விட்டு நகர்கிற நிலையும் நிலவி வருகிறது.
வரும் வாரங்களில் ப்ரீடம், தேசிங்கு ராஜா 2, மிஸஸ் & மிஸ்டர், ஓஹோ எந்தன் பேபி, பன் பட்டர் ஜாம், ட்ரெண்டிங் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இவற்றில் முன்னணி நடிகர் நடிகையர் இடம்பெறாவிட்டாலும், ஏதோ ஒருவகையில் இப்படங்கள் கவன ஈர்ப்பை உருவாக்கியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

இந்தச் சூழலில், வரும் 25ஆம் தேதியன்று ‘மாரீசன்’ படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாமன்னன்’ படத்தில் எதிரும்புதிருமாகத் திரையில் காட்சியளித்த வடிவேலு, பகத் பாசில் இருவரும் ஒன்றாகத் திரிவதாகக் கதை சொல்கிறது இப்படம். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிற இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ஜூலை வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதே தேதியில்தான் பாண்டிராஜ் இயக்கிய ‘தலைவன் தலைவி’ வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. Maareesan vs Thalaivan Thalaivi Movie

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிற இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு, செம்பன் வினோத் ஜோஸ் தொடங்கிப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ, டீசரை தொடர்ந்து ‘வாடி என் பொட்டல முட்டாயி’ பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக விஜய் சேதுபதி உடன் நித்யா மேனன் நடிப்பில் எப்படி போட்டியிடப் போகிறார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதன் யுஎஸ்பியாக உள்ளது.
போலவே, பகத்தும் வடிவேலுவும் திரையில் நிகழ்த்தவிருக்கிற அதகளத்தைக் காணத் தயாராக இருக்கின்றனர் ரசிகர்கள். Maareesan vs Thalaivan Thalaivi Movie
ஆக, மாரீசன் வெர்சஸ் தலைவன் தலைவி என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த போட்டிக்கு நடுவே, வேறு பல நல்ல படங்கள் ரசிகர்களின் பார்வையைப் பெறாமலேயே மறைந்துவிடக் கூடாது என்பதே திரை ஆர்வலர்களின் கவலை..!
