நகைச்சுவை நடிகராகக் களமிறங்கியபோதே இளைஞர்களைக் குறிவைத்து ‘காமெடி’ செய்வதோடு குடும்ப ஆடியன்ஸையும் கிச்சுகிச்சு மூட்டுகிற வேலையைச் செய்தவர் நடிகர் சூரி. அவருக்குப் புகழ் பெற்றுத் தந்த ‘வெண்ணிலா கபடி குழு’ முதல் பல படங்களில் அதனைக் காண முடியும். Maaman Movie Trailer
தான் நாயகனாக நடிக்கிற படங்களிலும் மெல்ல அந்த ‘பார்முலா’வை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறாரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது ‘மாமன்’ பட ட்ரெய்லர்.
‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஒரு சாதாரணமான போலீஸ் கான்ஸ்டபிளாக திரையில் தெரிய மெனக்கெட்டிருந்தார். முப்பதுகளில் இருக்கிற ஒரு கிராமத்து இளைஞனின் சிந்தனையோட்டமும் செயல்பாடும் இப்படித்தான் இருக்கும் என்ற சொல்கிற அளவுக்கு அப்பாத்திரத்தின் உடல்மொழியை வெளிக்காட்டியிருந்தார்.
பிறகு ‘கொட்டுக்காளி’யிலும் ஆணாதிக்கம் கொண்ட, ஆணவக்கொலையைப் புரிவதற்கு ஈடான சாதி வெறியுடைய, ’சராசரி’ என்ற பெயரில் அசாதாரணமான மனநிலையோடு வாழ்கிற ஒரு ஆணைத் திரையில் பிரதிபலித்திருந்தார்.
’கருடன்’ படத்தில் தன் மீது இரக்கம் காட்டிய முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிற ஒரு அடியாளாகத் தெரிந்தார். Maaman Movie Trailer

‘சென்டிமெண்ட்’ கதை! Maaman Movie Trailer
அந்த வரிசையில், இப்போது ‘மாமன்’ படத்தில் ஒரு சாதாரணமான மனிதனாகத் தோன்றியிருக்கிறார். அதேநேரத்தில், ‘தாய்மாமன்’ என்கிற வார்த்தைக்கு இன்றைய தலைமுறைக்கு அர்த்தம் தெரிகிற வகையில் ஒரு ‘அசாதாரணமானவனாக’த் திரையில் தெரிய முயற்சித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது அப்பட ட்ரெய்லர்.
ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ‘ப்ரூஸ்லீ’, விமலை நாயகனாகக் கொண்டு ‘விலங்கு’ வெப்சீரிஸ் தந்த பிரசாந்த் பாண்டியராஜ் இதனை இயக்கியிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் கதைக்கு நேரே ‘சூரி’ என்ற பெயர் டைட்டிலில் வருகிறது. இது இந்த ட்ரெய்லர் தரும் முதலாவது ஆச்சர்யம். Maaman Movie Trailer
கர்ப்பிணியாகத் தோற்றம் தருகிற சுவாசிகாவின் அருகே வந்து, ‘அக்கா.. உன் பிள்ளைக்கு இப்போ காது முளைச்சிருக்கு.. ஆனா நான் தான் முதல்ல பேசுவேன்’ என்று உரிமையோடு சூரி பேசத் தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கிறது ‘மாமன்’ ட்ரெய்லர்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை என்று ஒவ்வொரு சொந்தமாகச் சொல்லி, இன்னும் பலர் இருக்கின்றனர் என்று விளக்கி, அவர்களனைவரையும் தாண்டி உனது உலகமே நானாக இருக்கப் போகிறேன் என்று சொல்கிற மாமன், ஒருநாள் உறவுகளின் பிரிவால் தனது சகோதரியின் மகனோடு உறவு பாராட்ட முடியாத நிலைக்கு ஆளாவதைச் சொல்கிறது. Maaman Movie Trailer
நிச்சயமாக, இது ‘சென்டிமெண்ட்’ கதை என்பதைத் தனியே விளக்க வேண்டிய தேவை இல்லை. அதேபோல, வழக்கமான குடும்பப் பட பாணியில் ட்ரெய்லரில் இடம்பெற்ற ஷாட்கள் அமையவில்லை.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், ஹேஷம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும் அதனை நமக்கு உணர்த்தி விடுகின்றன.
இசையமைப்பாளர் ஹேஷம் நமக்கு மலையாளப் படமான ‘ஹ்ருதயம்’ வழியே அறிமுகமானவர் தான். அந்த படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட். தெலுங்கில் குஷி, ஹாய் நானா தந்தவர் தமிழில் அறிமுகமாகிற படம் இதுவே. இதனைத் தொடர்ந்து ‘ஒன்ஸ்மோர்’ வரவிருக்கிறது.
’மாமன்’னில் சுவாசிகா – பாபா பாஸ்கர் ஜோடி நிச்சயம் வித்தியாசமாகத் திரையில் தெரியும். சூரியின் ஜோடியாக இதில் ஐஸ்வர்யா லெட்சுமி வருகிறார். இவர்களோடு ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், ஜெயபிரகாஷ், கீதா கைலாசம், பாலசரவணன், சாயா தேவி, நிகிலா விமல், கலைவாணி பாஸ்கர், மெல்வின், திருச்சி ஆனந்தி என்று பலர் நடித்திருக்கின்றனர்.
‘கருடன்’ படத்தை ஆக்கிய கே.குமார், ‘லார்க் ஸ்டூடியோஸ்’ சார்பில் இதனைத் தயாரித்திருக்கிறார்.

அம்மா, அப்பா, ஒரு உடன்பிறப்பு, சில வீடுகளில் அம்மா வழி அல்லது அப்பா வழி தாத்தா பாட்டி என்று சுமார் ஆறு உறுப்பினர்களே ‘குடும்பம்’ என்றாகிபோன இன்றைய சூழலில், தாய்மாமன் உறவின் மகத்துவத்தைச் சொல்லும்விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. நிச்சயம் இது வயதில் மூத்தவர்களை ஈர்க்கக்கூடியது.
’ஹீரோயிசம்’ என்ற பெயரில் இளையோரைக் குறிவைக்கவே எல்லோரும் முயலும் நேரத்தில், ‘நாம இந்த பக்கமா போவோம்’ என்று சூரி தனது கவனத்தை முப்பதுக்கு மேற்பட்ட வயதினர் மீது பாய்ச்சியிருப்பது ஒரு சிறப்பான ‘உத்தி’.
‘தாய் தந்தையின் கடமைகளில் பாதியைத் தனதாகக் கொண்டவன் மாமன்’ என்பது முன்னோர்கள் வகுத்த இலக்கணம். இன்று அது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. அதனைச் சாத்தியப்படுத்துகிற வகையிலான ஒரு கற்பனை கதையை ‘கமர்ஷியல் படத்திற்குரியதாக’ யோசித்தது, நிச்சயம் குடும்பத்தோடு தியேட்டருக்கு வருகிற ரசிகர்களின் ‘பல்ஸை’ நன்கு உணர்ந்ததற்குச் சமம்.
அந்த வகையில் இப்படம் பல ஆச்சர்யங்களைத் தரலாம். ஏற்கனவே பார்த்த கதை, பழகிய பாத்திர வார்ப்பு, காட்சிகள் என்றபோதும், ‘ப்ரெஷ்’ஷான திரையனுபவத்தைத் தருவதும் இனிமையானதுதான். Maaman Movie Trailer
‘மாமன்’ அந்த மாயாஜாலத்தைச் செய்தால் கொண்டாடத்தான் வேண்டும்..!
