மதுரையில் சிபிஐ ( எம்) 24-ஆவது அகில இந்திய மாநாடு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (ஏப்ரல் 6) நிறைவடைந்தது. MA Baby cpi(m) general secretary
இந்த மாநாட்டில் சிபிஐ(எம்) அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக பஞ்சாப்பை சேர்ந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித், டெல்லியை சேர்ந்த பிரகாஷ் காரத், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சீதாராம் யெச்சூரி ஆகியோர் இருந்தனர்.

யார் இந்த எம்.ஏ.பேபி?
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளி பருவத்தில் எஸ்.எஃப்.ஐ-யில் சேர்ந்து அரசியலில் தீவிரமாக பணியாற்றி வந்தார். அதன்பிறகு டிஒய்எஃப்ஐ அமைப்பில் பணியாற்றினார். அதன்பிறகு நேரடியாக சிபிஐ (எம்) கட்சியில் சேர்ந்தார்.
கேரளாவில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். இவர் கேரள மாநில அமைச்சராகவும், எம்.பி-யாகவும் இருந்துள்ளார். கட்சியின் சர்வதேச பிரிவுக்கு பொறுப்பு வகித்து வந்தவர்.
எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“சிபிஐ(எம்) பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ. பேபிக்கு வாழ்த்துக்கள். மாணவர் தலைவராக அவசரநிலையை எதிர்கொண்டதிலிருந்து, முற்போக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கேரளாவின் கல்விக் கொள்கையை வடிவமைப்பது வரை, அவரது பயணம் மிக நீண்டது.
மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சியை உறுதிப்படுத்துவதில் திமுக உங்களுடன் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்த மாநாட்டில் புதிதாக 18 பொலிட்பியூரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- பினராயி விஜயன்
- பி.வி.ராகவுலு
- எம்.ஏ.பேபி
- தபன் சென்
- நிலோத்பால் பாசு
- எம்.டி.சலீம்
- விஜயராகவன்
- அசோக் தவாலே
- ராமச்சந்திரா டோம்
- எம்.வி.கோவிந்தன்
- அம்ரா ராம்
- விஜூ கிருஷ்ணன்
- மரியம் தவாலே
- உ.வாசுகி
- கே.பாலகிருஷ்ணன்
- ஜிதேந்திர சவுத்ரி
- ஸ்ரீதீப் பட்டாச்சார்யா
- அருண் குமார் MA Baby cpi(m) general secretary