இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு- ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!

Published On:

| By Mathi

CPI Veerapandian

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநில குழு செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன், புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இரா. முத்தரசன் 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்து வந்தார். தற்போது, மாநில துணைச் செயலாளராக இருந்த மு. வீரபாண்டியன், புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!

ADVERTISEMENT

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share