நீதியை நிலைநாட்டுவோம் – அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின்

By Pandeeswari Gurusamy

|

Published on 14 Apr 2026, 10:36 AM

MK Stalin

நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ‘

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில், “ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!

ADVERTISEMENT

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்!” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel