தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் இன்று (ஜனவரி 16) முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். விருது பெற்ற முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இத்தொடரந்து விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
விருது வென்றவர்களின் விபரங்கள்
அய்யன் திருவள்ளுவர் விருது – மு.பெ.சத்தியவேல் முருகனார்
தந்தை பெரியார் விருது – வழக்கறிஞர் அ. அருள்மொழி
அண்ணல் அம்பேத்கர் விருது – சிந்தனைச் செல்வன்
பேரறிஞர் அண்ணா விருது – அமைச்சர் துரைமுருகன்
பெருந்தலைவர் காமராசர் விருது – எஸ்.எம்.இதயத்துல்லா
மகாகவி பாரதியார் விருது – நெல்லை ஜெயந்தா
பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் யுகபாரதி
தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது – வெ.இறையன்பு ஐஏஎஸ்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – சு.செல்லப்பா
முத்தமிழறிஞர் கலைஞர் விருது – விடுதலை விரும்பி
இலக்கிய மாமணி விருது
மரபு தமிழ் விருது – எழுத்தாளர் ராமலிங்கம்
ஆய்வு தமிழ் விருது – எழுத்தாளர் மகேந்திரன்
படைப்புத் தமிழ் விருது – எழுத்தாளர் நரேந்திரகுமார்
விருது வென்றவர்களுக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விருதாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
