முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் 101 ஆவது பிறந்தநாள்: தியாகத்தின் பெருவாழ்வு – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Published On:

| By Pandeeswari Gurusamy

விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான இரா. நல்லகண்ணு இன்று (டிசம்பர் 26) தனது 101 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியானவர் நல்லகண்ணு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ” தியாகத்தின் பெருவாழ்வு: தோழர் நல்லகண்ணு ஐயா 101-ஆவது பிறந்ததாள்.

ADVERTISEMENT

விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் – நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share