Mஸ்டார் கூட்டணி: தப்ஸி விலகல்!

Published On:

| By Balaji

தப்ஸி பன்னு பாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாஸு இயக்கும் புதிய படத்தில் இணைந்திருந்த அவர் தற்போது அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.

தப்ஸி பன்னு, ராஜ்குமார் ராவ், பாத்திமா சனா ஷாகித், ஆதித்யா ராய் கபூர், அபிஷேக் பச்சன் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டணியை உருவாக்கி அனுராக் பாஸு புதிய படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் நடிக்க தப்ஸி எந்தத் தேதிகளில் தனது கால்ஷீட் வேண்டும் எனப் படக்குழுவிடம் கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்காததால் படத்திலிருந்து விலகியுள்ளார்.

தப்ஸி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மன்மஸ்ரியான், முல்க் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாகின. இந்த ஆண்டு இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன.

தப்ஸி நடித்துள்ள டாட்கா, பாடியா ஆகிய இந்திப்படங்களின் படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழ், தெலுங்கில் நடித்த கேம் ஓவர் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவுற்றது. இது தவிர துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் புதிய படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக தப்ஸி நடிக்கவுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share