வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை நேற்று (ஆகஸ்ட், 24) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்களின் பதிவை புதுப்பித்து, அதன் மூலம் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையில் அரசு சலுகை வழங்கியுள்ளது. அதன்படி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பதிவை மேலும் ஐந்தாண்டுகளுக்குப் புதுப்பிக்கலாம்.
புதுப்பிக்க விரும்புவோர், மூன்று மாதங்களுக்குள் (21.11.2017), தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நேரில் செல்ல முடியாதவர்கள், http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் புதுப்பிக்கலாம்.
