விஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்

Published On:

| By Balaji

முதன் முறையாக விஜய் சேதுபதியும் ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படங்களைத் தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார். எஸ்.பி. ஜனநாதனின் மல்டி ஸ்டார் படமான புறம்போக்கு என்கிற பொதுவுடமையில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜனநாதனும் விஜய் சேதுபதியும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

ADVERTISEMENT

தன் படங்களின் மூலம் இடது சாரி அரசியல், உலகமயமாக்கல், கார்பரேட் ஆதிக்கம் என அரசியல் கருத்துக்களை தொடர்ந்து முன்வைக்கும் எஸ்.பி. ஜனநாதனின் புதிய படமும் அரசியல் மற்றும் சமூக அக்கறை கொண்ட படமாகயிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல் படத்தின் டைட்டிலும் ‘லாபம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இன்று முதல் லாபம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது சன் தொலைக்காட்சியில் ‘ஹலோ சகோ’ என்ற டாக் ஷோ நடத்திவரும் ஸ்ருதி ஹாசன், சிங்கம் 3க்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு தமிழில் நடிக்கிறார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு விஜய் சேதுபதி தனது ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷஸ்’ சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். 7 சிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

ADVERTISEMENT

விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி நடிக்கும் சிந்துபாத் திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share