ராணுவத்துக்கு செல்லும் தோனி

Published On:

| By Balaji

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை எதிர்கொள்ள கிளம்பும் இந்திய அணியில் தோனி இறங்கமாட்டார் என ஏற்கெனவே தகவல் பரவிய நிலையில் தற்போது அவர் இரு மாதங்கள் ஓய்வில் துணை இராணுவத்தில் பணியாற்றவுள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததிலிருந்து தோனியின் ஓய்வு குறித்து பேசுவது கிரிக்கெட் ரசிகர்களின் பொழுதுபோக்காக மாறியிருக்கிறது.

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்கமாட்டார் என்ற பேச்சு அடிபட்டது. “15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருப்பினும் 11 பேர் அணியில் தோனி இடம்பெறமாட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விளையாடுவார். இளம் வீரர் ரிஷப் பந்துக்கு தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார்” என்று பெயர் குறிப்பிடாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் நாளை (ஜூலை 21) வெளியாகவுள்ள நிலையில் தோனி பங்கேற்கமாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

“துணை ராணுவப் படையில் அடுத்த 2 மாதங்கள் பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் பங்கேற்க முடியாது“ என தோனி பிசிசிஐக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் உள்ள தோனி நேரம் கிடைக்கும்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

ADVERTISEMENT

மேலும் படிக்க

**

**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share