ஒரு புளிப்பு மிட்டாய்கூட வாங்கமுடியாத ஃபேஸ்புக் லைக்ஸ் வாங்க எப்படியெல்லாம் ப்ளான் பன்றாங்க பாருங்க. நீங்க இதைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது 10000க்கு மேல போயிடுச்சு எண்ணிக்கை.
*****************************************************************************
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஈழம் சென்று, பிரபாகரனைச் சந்தித்து வந்ததை செய்தியாளர்களிடம் சொல்லும் வீடியோ நேற்று வெளியாகி உடுமலைப்பேட்டை சம்பவத்தைக் கொஞ்சம் மறக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து வெளியான சமூக ஊடக கருத்துகள் கீழே.
//
நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
பிரபாகரனை பார்க்கப் போகும்முன் அடையாளத்தை மறைக்க என்னை மீசையை எடுக்கச் சொன்னார்கள் – சீமான்
:>>நீங்க ஒரு டெலக்ஸ் பாண்டியன்”னு அவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும்போல //
// நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக், இன்று அறிவாலயம் சென்று திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு – செய்தி
:>>தலைவனுக்கு கழகத்தின் சார்பாக ஒரு தொப்பியும், கூலிங் கிளாஸும் கொடுத்தா போதும் ..சீட்டு கொடுக்கிறது வேஸ்ட் //
// பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். ‘குருடீ’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் வாழ்கிறார் – சிங்கள நாளிதழ் பரபரப்புத் தகவல்
:>>இது உண்மையாக இருந்தால், தமிழக அரசு மேதகு சீமானுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவேண்டும்//
// @thoatta
லட்சக்கணக்கான பேர் இருக்கும் திமுக, இப்ப கலைஞரிடம் இல்லைன்னு, யாருமே இல்லாம மதிமுக வச்சிருக்கிற வைகோ வருத்தப்படுறாரு :-/ //
// சி.பி.செந்தில்குமார் @senthilcp
கருணாநிதிக்கு இனி சறுக்கல்தான்: வைகோ கணிப்பு
# தலைவருக்காவது ஜான் ஏறினா முழம் சறுக்குது, நாம இன்னும் 1 செமீ கூட ஏறவே இல்லையே? //
**********************************************************************************************************************************************
இன்று இரண்டு வகை ஸ்டேட்டஸ்கள் ஷேர் செய்கிறேன். ஒன்று, பொலிடிக்கல் ஸ்டேட்டஸ் மற்றொன்று, ஒரு மாமனார் மருமகனிடம் ஸ்டேட்டஸ் வாரியாக வைத்த வேண்டுகோள். முதலில் பொலிடிக்கல் ஸ்டேட்டஸ்
// வில்லவன் இராமதாஸ்
பாஜக டிக்ஷ்னரி –
#உண்மை – பாஜக-வினருக்கு எதுவெல்லாம் தெரியுமோ, அவையெல்லாம் உண்மை எனப்படும்.
#பொய் : பாஜக-வினருக்குப் பிடிக்காதவை எல்லாம் பொய் எனப்படும்.
#வரலாறு – பாஜக-வால் எவையெல்லாம் உருவாக்கப்படுகிறதோ, அவையெல்லாம் வரலாறு எனப்படும்.
#அவதூறு – தப்பிக்க இயலாமல் சிக்கிக்கொள்ளும் விவகாரங்கள் அவதூறு எனப்படும்.
#வதந்தி – பலரிடமும் அம்பலப்பட்ட விவகாரம் வதந்தி எனப்படும்.
#தேச_பக்தி – பாஜக-வினர் செய்வது எல்லாம், தேசத்தை விற்பது உட்பட ‘தேசபக்தி’ எனப்படும்.
#தேச_துரோகம் – பாஜக-வினரைக் கேள்வி கேட்பது தேசத் துரோகம் எனப்படும். //
//
Needhi Mani
எங்க மாப்பிள்ளை எட்வின், என்னை Goole circule-ல் இணைத்துக் கொண்டாராம்.
நோடிஃபிகேசன் வந்தது.
இப்படிதான், வாட்ஸ்அப் பற்றி தெரியாம இருந்தப்ப, வாட்ஸ்அப் குழுவில் இணைத்திருந்தார்.
இப்ப கூகுள் சர்க்கிளில் சேர்த்திருக்கிறார். அதைப்பற்றியும் எனக்குத் தெரியவில்லை.
முதலில் எனக்குச் சொல்லிக்குடுங்க. அப்புறம் சேருங்க.
உனக்குப் பொண்ணு குடுத்த புண்ணியத்துக்கு இதையாவது செய்யுங்க மாப்ள. //,”
