எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா அதிரடியாக 23 இடங்கள் முன்னேறியுள்ளது.
உலக நாடுகளின் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களைப் பொறுத்து அந்நாடுகளுக்கான பட்டியலை உலக வங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. சென்ற ஆண்டுக்கான பட்டியலில் 100ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டில் 23 இடங்கள் முன்னேறி 77ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. தெற்காசியாவிலேயே இப்பட்டியலில் மிகப் பெரிய முன்னிலையை இந்தியாதான் கொண்டுள்ளது. ஆறு சீர்திருத்தங்களை இந்தியா இந்த ஆண்டில் மேற்கொண்டதாகவும், இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிக முன்னேற்றம் கண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்தியா கண்டுள்ள இந்த முன்னேற்றம் மோடி அரசுக்கு ஆதரவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்ற ஆண்டில் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி, எளிதாகத் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா விரைவில் 50ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும், எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களை மேம்படுத்தியுள்ளதாகவும் புளூம்பெர்க் ஆய்வு கூறுகிறது. சரக்கு மற்றும் வரி, ரியல் எஸ்டேட் சட்டம், வங்கி திவால் சட்டம் போன்றவை உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.�,