ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் தலைவர் 170 படப்பிடிப்பில் ஒன்றாக நடிக்கும் போது இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தயாராகும்தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக மும்பையில் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் ரஜினிகாந்த் காம்பினேஷனில் நடித்து வருகிறார். இதனை அதிகார பூர்வமாக படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் புகைப்படத்தை தங்களது X பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் ஃபார்மல் ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து கொண்டு, கோட் சூட்டில் அமர்ந்திருக்கும் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து போனை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.
தலைவர் 170 படத்தின் மும்பை படவேலை நிறைவடைந்ததாகவும் இந்த பதிவில் லைகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த், காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
https://twitter.com/LycaProductions/status/1718545711128568045
அதே போல் இந்த படத்தின் மூலம், ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவரும் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் அமிதாப் உடனான புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்திருந்த ரஜினிகாந்த், “”33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டி, ஆளுமை, அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன். என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : fssai-யில் பணி!
பியூட்டி டிப்ஸ்: இயற்கை முறையில் முகப்பருவுக்குத் தீர்வு உண்டா?
கேரள குண்டுவெடிப்பு: உடனே வெளியேறிய கார்… சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீஸ்!
கார்த்தி 25: இயக்குநர் அமீர் பங்கேற்காதது ஏன்? ரசிகர்கள் கேள்வி!