லூசிஃபர் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published On:

| By Selvam

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்பின் லுசிஃபர் 2 படத்தை ப்ரித்விராஜ் இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து லூசிஃபர் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக  அறிவிப்பு வெளியானது. லூசிஃபர் இரண்டாம் பாகத்திற்கு “L2 எம்புரான்” என பெயரிடப்பட்டது.

ADVERTISEMENT

சமீபத்தில் லூசிஃபர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் 5 தேதி தொடங்கியது.

மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் லூசிஃபர் முதல் பாகத்தை தயாரித்திருந்தது. தற்போது லூசிஃபர் இரண்டாம் பாகத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம்  லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் மலையாளத்தில் தயாரிக்கும் முதல் படம் லூசிஃபர் 2 என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று நவம்பர் 11ஆம் தேதி லூசிஃபர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அலுவலகத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் தற்கொலை!

டெல்லியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share