லப்பர் பந்து ஓராண்டு நிறைவு… தனுஷுக்கு நன்றி சொன்ன தமிழரசன் பச்சமுத்து

Published On:

| By christopher

lubber panthu tamilarasan next film with dhanush

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் லப்பர் பந்து. கிரிக்கெட் விளையாட்டையும், காதலையும் ஒரே சேர விறுவிறுப்பாக வெளிகாட்டிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடிய இப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியதுடன் அறிமுக இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து நற்பெயரை வாங்கி கொடுத்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து அவர் அடுத்த யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பது குறித்து இணையதளங்களில் தகவல்கள் றெக்கைக் கட்டிக் கொண்டு பறந்தன.

இந்த நிலையில் லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவையொட்டி நன்றி தெரிவித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழரசன் பச்சமுத்து.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா?? Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா?? பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா??

இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு! first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க..

ADVERTISEMENT

’இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல, எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாரு’னு… ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் 🙏❤️❤️

இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்!

ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்.. தனுஷ்
சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு …

நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்🤞🏻❤️🫂” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share