ADVERTISEMENT

நான் ஒரு குடும்பப் பெண் – ‘லப்பர்பந்து’ நடிகையின் பெருமிதம்!

Published On:

| By uthay Padagalingam

lubber panthu fame swasika like the culture

ஒருகாலத்தில் இளைஞர்கள் விரும்புகிற ‘ஐடியல் கேர்ள்’ பற்றிய விவரணைகளில் ‘குடும்பப்பாங்கான தோற்றம்’ என்பது முக்கிய இடத்தைப் பிடிக்கும். புதிதாக ஒரு நாயகி அறிமுகமாகும்போது, ‘பேமிலி கேர்ள் மாதிரி இருக்குறதுதான் ஸ்பெஷல்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.

அந்த வார்த்தைகளுக்கு ‘உயிர்’ கொடுத்தாற்போலச் சில விளம்பரப் படங்களில் நெற்றிப் பொட்டு, ஒற்றைச் சடை, பின்னந்தலையில் மல்லிகைப்பூ, மஞ்சள் தடம் மிளிரும் முகம், ஒற்றை மூக்குத்தி, புருவங்களுக்கு இடையே மெலிதாய் ஒரு வட்டப் பொட்டு, ஆபாசமான எண்ணத்தை விதைக்காத சேலைக்கட்டு, காலில் கொலுசு, கழுத்தில் தாலி என்று சில ‘வெளிநாட்டு மாடல்’களுக்கு இந்தியச் சாயம் பூசியிருப்பார்கள். ‘ரொம்பவே அன்னியோன்யமான இணை இவர்’ என்று காட்ட, சில பெண்களை ஈரத்துண்டு கொண்டு ’கொண்டை’ போட்டவாறு வாசலில் கோலமிட விட்டிருப்பார்கள்.

ADVERTISEMENT

கிட்டத்தட்ட அப்படியொரு பிம்பம் மீது தனக்கு அலாதிப் பிரியம் என்று தெரிவித்திருக்கிறார் ‘லப்பர்பந்து’ புகழ் சுவாசிகா.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், ’நெற்றித் திலகத்திற்காகவும் தாலிக்காகவும் தான் நான் திருமணம் செய்துகொண்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். அதாகப்பட்டது, இந்த கலாசாரம் தனக்கு மிகவும் பிரியமானது என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

“எந்த ட்ரெஸ் அணிந்தாலும் அவை என்னுடன் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டேன். அதேநேரத்தில் சேலையில் இருந்தால் கண்டிப்பாக அவையிரண்டும் என்னுடன் இருக்கும். போலவே, காலை நேரம் வீட்டில் இருந்தால் அவற்றோடுதான் காட்சியளிப்பேன். திருமணம், குடும்பம், குழந்தைகள், கணவரின் காலைத் தொட்டு வணங்குவது போன்ற பழக்கங்கள் பற்றி டீன் ஏஜிலேயே நான் யோசித்திருக்கிறேன்” என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சுவாசிகா.

“குடும்பப் பெண் என்று சொன்னால் இப்போதிருக்கும் இளைய தலைமுறையினர் கிண்டலடிப்பார்கள். ஆனால், நான் அப்படிச் சொல்லிக் கொள்வதில் பெருமிதப்படுகிறேன்” என்று ‘சீரியல்’ வசனம் போன்று பேசியிருக்கிறார் ‘லப்பர்பந்து’ நாயகி.

ADVERTISEMENT

‘சீரியல் டைப் கதைகளையே சினிமாவில் தேர்ந்தெடுக்கிறீங்க’ என்று கிண்டலடிப்பவர்களை முந்திக்கொண்டு, ‘அதுக்கும் மேல’ என்பதாகப் பழமையான வழக்கங்கள், பாரம்பரியமான நடைமுறைகள் மீதான பிரியத்தை வெளிக்காட்டியிருக்கிறார் சுவாசிகா. இதற்கான எதிர்வினைகள் என்ன என்பது அவரது அடுத்த படம் வெளியாகிறபோது தெரிந்துவிடும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share