ADVERTISEMENT

70 மணி நேரம் நாராயணமூர்த்தி பரவாயில்லையே? எல் அண்டு டி தலைவர் போட்ட குண்டு!

Published On:

| By Kumaresan M

“எவ்வளவு நேரம்தான் வீட்டில் மனைவி முகத்தையே பார்த்து கொண்டு இருப்பீங்க, ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வந்தால் என்ன? என எல் அண்டு டி நிறுவனத் தலைவர் சுப்ரமணியன் கேள்வி கேட்டுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரை, ஊழல்களை குறைக்காத வரை வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. எனவே அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாராயணமூர்த்தியே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு எல் அண்டு டி தலைவர் சுப்ரமணியம் வாரத்துக்கு 90 மணி நேர வேலை செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்தில் சுப்ரமணியன் வேலை – வாழ்க்கை சமநிலை பற்றி எல் அண்டு டி ஊழியர்களுடன் விவாதித்தார். அப்போது, ஊழியர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

ஊழியர்கள் மத்தியில் அவர் பேசும்போது , ‘ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களை வேலை பார்க்க வைத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ADVERTISEMENT

ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமையும் நான் வேலை பார்க்கிறேன். சீன மனிதர் ஒருவருடன் நான் உரையாடினேன். அங்கு 90 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள் என்று என்னிடத்தில் கூறினார். அமெரிக்காவில் 50 மணி நேரம் தான் வாரத்துக்கு வேலை பார்க்கின்றனர். உலகத்தில் உன்னத நிலைக்கு நாம் போக வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share