கொல்கத்தா அணியை எதிர்கொண்ட லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. LSG get thrill win at 20th over against kkr
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேட்பன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மார்க்ரம் (47), மார்ஷ் (81) மற்றும் பூரன் (87*) ஆகியோர் அதிகபட்ச ரன்களை குவித்தனர்.
தொடர்ந்து 239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் (15) மற்றும் சுனில் நரேனும் (30) அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
மற்றும் கேப்டன் ரஹானே பொறுப்போடு ஆடி 35 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். அவருக்கு துணையாக வெங்கடேஷ் ஐயரும் தன் பங்கிற்கு 45 ரன்களை சேர்த்தார்.
இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்ட கொல்கத்தா அணி, வெற்றியை நோக்கி முன்னேறியது. ஆனால் அடுத்து களம் கண்ட ரமன்தீப் சிங் (1), ரகுவன்சி (5), ஆன்ட்ரூ ரசூல் (7) என மிடில் ஆர்டர் பேஸ்ட்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிங்கு சிங் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களை குவித்து வெற்றிக்கு மிக அருகில் நெருங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்களை தான் எடுத்தது.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது. அந்த அணி தரப்பில் ஆகாஷ் தீப், சர்தூல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பை கைவசம் வைத்துள்ள பூரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.