மே 27ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. low pressure area will form in Bay of Bengal
தமிழகத்தில் மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெப்பம் வாட்டி வதைத்தது. அதைத்தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்ததால் குளிர்ந்த வானிலை நிலவியது.
இந்தசூழலில் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 27ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (மே 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
கோவா – தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (22-05-2025) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும். அதன் பிறகு இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.
22-05-2025 மற்றும் 23-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-05-2025 முதல் 26-05-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது”என்று தெரிவித்துள்ளது. low pressure area will form in Bay of Bengal