காதல், திருமண உறவு வழக்கு : டிஜிபி புது உத்தரவு!

Published On:

| By Kavi

காதல் விவகாரங்களில் அவசரப்பட்டு போக்சோ வழக்கு பதிய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர், போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து, வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

அதன்படி டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக கு.வி.மு.ச பிரிவு 41(4)ன்  படி சம்மன் அனுப்பி எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்து அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.

முக்கிய வழக்குகளில் இறுதி அறிக்கையினை (குற்றப் பத்திரிக்கை), உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

பிரியா

இவ்வளவு செலவா? ஆளுநருக்கு ஆடம்பரமான மாளிகை எதற்கு?

சாபக்கேடு : ஆளுநர் செயல் குறித்து துரை வைகோ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share