நடிகை த்ரிஷா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Love Always Wins
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 41 வயதை கடந்த த்ரிஷா தனது இளமை மாறாத தோற்றத்தால் ரசிகர்களின் பேவரைட் நாயகியாக உள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் த்ரிஷாவின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியானது.
அதைத்தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் த்ரிஷா.
அதில், தனது செல்ல நாயுடன் வொர்க்கவுட் செய்கிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து த்ரிஷா இன்று (மார்ச் 29) பகிர்ந்துள்ள அவரது புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தலையில் ஒருவர் பூ வைப்பது போலவும், கையில் மோதிரம் மூக்கில் மூக்குத்தி என மணப்பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறார் த்ரிஷா. கூடவே கேப்ஷனில் “காதல் எப்போதும் வெல்லும்” (Love Always Wins) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்க்கும் நெட்டிசன்கள் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிலர் இது விளம்பர சூட்டிங் அல்லது புதிய படத்துக்கான லுக்காக இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர். Love Always Wins