ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களுடன் விபத்தில் கவிழ்ந்த லாரி!

Published On:

| By admin

கோவை, சூலூர் அருகே விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரியில் ஏற்றி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் அவ்வழியாக சென்ற மதுப்பிரியர்கள் பலர் கவிழ்ந்து கிடந்த லாரியையும், உடைந்து கிடந்த மதுபாட்டில்களையும் பரிதாபமாக பார்த்துச் சென்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் உள்ள கொச்சின் பைபாஸ் சாலையில், பூந்தமல்லியில் இருந்து பீளமேடு பகுதிக்கு மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று, நேற்று (ஜூன் 12) இரவு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

ADVERTISEMENT

ஆனால், லாரியில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,200 மதுபாட்டில்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே அவ்வழியாக சென்ற மதுப்பிரியர்கள் பலர் கவிழ்ந்து கிடந்த லாரியையும், உடைந்து கிடந்த மதுபாட்டில்களையும் பரிதாபமாக பார்த்துச் சென்றனர்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share