அந்தக் கால வில்லங்க சினிமா செய்தி எப்படி இருக்கு பாருங்க!

Published On:

| By Minnambalam Desk

Look at what the film news was like in those days

விதம்விதமான வில்லங்கமான சினிமா செய்திகளை நீங்கள் படித்து இருக்கலாம்.

ஆனால் அறுபது வருடம் முன்பு வந்த ஒரு தமிழ் சினிமா வில்லங்க செய்தி எப்படி இருக்கு என்று பாருங்கள்.

ADVERTISEMENT

(29.4.66) இந்து நேசன் மலர் 8 29.4-66 வெள்ளிக்கிழமை இதழ் 30

நடிகை லட்சுமி ராஜத்தின் காமெடியான வேலை கதை!
ஆர்மினிய மாணிக் __ வேலை! (FILL IN THE BLANKS வேண்டாம்.)

ADVERTISEMENT

முன் ஒரு காலத்தில் நடிகை லட்சுமி ராஜம் திரையுலகத்துக்கே புதிதாக இருந்த போது ஒரு பெரியவர் லட்சுமி ராஜத்தை நேரில் பார்த்து சினிமாவுல நடிக்கும் ஆசையை நீங்க விட்டுடனும்… சினிமாவுக்கு நீங்க சற்றும் லாயக்கில்லைன்னு சொன்னதைக் கேட்டு அவள் சற்றும் கலங்காதவளாய்த் துணிச்சல் அடைந்தவளாய் திரும்பிப் போய்விட்டாள்.

இந்தப் பெரியவருக்கு, நடிகை லட்சுமி ராஜம் நடிக்கும் படங்கள் வர வரப் பெரிய வெற்றியாகி வருவதைப் பார்க்கும்போது, சற்றும் பிடிக்கவில்லை. அவர் யாரென்றால் பிரபலமான டைரக்டர் ஆர்மினிய மாணிக்கம்..

ADVERTISEMENT

சிலகாலம் டைரக்டர் ஆர்மினிய மாணிக்கம் லட்சுமி ராஜத்தைப் பட்டும் படாமல் பேசாமலேயே இருந்த பிறகுதான் மாணிக்கம் லட்சுமிராஜத்தைப் பற்றியே பேச ஆரம்பித்தாராம்.

லட்சுமிராஜத்தைப் பற்றி டைரக்டர் ஆர்மினிய மாணிக்கம் ஒருநாள் திடீரென்று ஒரு பத்திரிக்கை பேட்டியில், “நடிகை லட்சுமிராஜம் நடிக்கவே லாயக்கில்லாதவர்னு முன்காலத்தில் நான்தான் சொன்னேன். அப்படின்னு சொன்ன நானே இன்று என் டைரக்ஷன்ல லட்சுமிராஜம் நடிக்கணும்னு ஆசைப்படும் படியான நடிகையா வளர்ந்துட்டா. அவளை நான் மனசார பாராட்டுறேன்!” என்று மனம் திருந்தியதாகப் பேசியிருக்கிறார்.

லட்சுமிராஜம் இந்த டைரக்டருக்குப் பணிவாக நன்றி கூறியிருக்கிறார்.

டைரக்டர் ஆர்மினிய மாணிக்கம் லட்சுமிராஜத்தை ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்திருக்கிறார். லட்சுமிராஜம் சற்றும் யோசிக்காமல் உடனே மாணிக்கம் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார்.

ஆனால், இந்தப் படக் கம்பெனிக்கு மாணிக்கம்தான் டைரக்டரென லட்சுமிராஜம் ஒருக்காலும் நினைக்கவே இல்லை. திடீரென்று மாணிக்கம் படப்பிடிப்புக்கு வந்ததும் லட்சுமி ராஜத்துக்குச் சற்றுக் கோபம் வந்திருக்கிறது.

“முன்காலத்தில் சினிமாவுல நடிக்க நீங்க லாயக்கில்லைன்னு சொன்னவரோட டைரக்ஷன்ல நான் நடிக்கவே மாட்டேன்!” என்று ஆர்மினிய மாணிக்கம் மேல கோபம் கொண்டு உடனடியாகப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்குப் பாராமுகம் காட்டிவிட்டுப் படப்பிடிப்பிலிருந்து உடனே புறப்பட்டுப் போய்விட்டாராம்.

ஆர்மினிய மாணிக்கம் ஒருக்காலும் லட்சுமிராஜத்தைத் தேடிக் கூப்பிடவில்லை. ஆனால், லட்சுமி ராஜம் சற்றும் யோசிக்காமல் ஆர்மினிய மாணிக்கம் வீட்டுக்குப் போய்ப் பேசியதில் மாணிக்கம் லட்சுமி ராஜத்தை மறுபடியும் படத்தில் நடிக்கக் கூப்பிட்டாராம். லட்சுமி ராஜம் மறுக்காமல் சம்மதித்து மாணிக்கம் படத்தில் நடித்திருக்கிறார். (தக்காளி , என்னா ஒரு டெஸ்க் ஒர்க்கு!)

டைரக்டர் ஆர்மினிய மாணிக்கம் இந்தப் படத்தை டைரக்ஷன் செய்ததுடன் நில்லாமல், படத்தில் லட்சுமிராஜத்துக்குப் _வாக நடித்தாராம்.

“பழங்காலத்துல என்னைப் பார்த்து நடிக்க நீங்க லாயக்கில்லைன்னு சொன்னது மட்டுமில்லை. நான் நடிக்கிற உங்கப் படத்துல எனக்கு நீங்க _ வேலை வேற பாத்திருக்கீங்க!” என்று லட்சுமி ராஜம் மாணிக்கம் மேல கோபம் கொண்டதற்கான கிண்டலாய் சொல்லிக்கொண்டு இந்தப் படப்பிடிப்பில் சிரித்தாராம். மாணிக்கம் மனமகிழ்ந்து லட்சுமிராஜத்தைப் பாராட்டினாராம்.

எப்படி இருக்கு?

ஒரு நல்ல செய்தியும் பார்க்கலாம்.

சென்னை கலா சகோதரிகள் தேநீஸ்!

சினிமாவில் பிரபலமாக வளர்ந்து வரும் சென்னை கலா சகோதரிகள் தேநீஸ் தங்கள் பெயரைக் கொஞ்சம் மாற்றிவிட்டனர். சகோதரிகள் இரண்டு பேரில் மூத்தவரான கலா தன் பெயரைக் கமலா என்று மாற்றிவிட்டதோடு, இளையவளான தேநீஸ் தன் பெயரை லலிதா என்று மாற்றிவிட்டனர்.

இன்று முதல் கமலா – லலிதா சகோதரிகள் என்று அழைக்கப்படுவார்களாம்.

மாற்றிய பெயருடன் முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவர்களுக்குத் தேடி வந்திருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு சகோதரிகளும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

இதைக் கமலா – லலிதா சகோதரிகளும் மனம் மகிழ்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தப் போவதாய் பத்திரிகையாளரிடம் பேசியிருக்கிறார்கள்.

கமலா, லலிதா இருவரும் சினிமாவுலகில் முன்னேற என்னுடைய மனமார வாழ்த்துக்கள்!

🎥 சினிமா சர்க்கிள் வார இதழ்
இந்துநேசன் சந்தா விவரம்:
மாதம் 1.50
1 வருடம் 18.00
6 மாதம் 9.00
3 மாதம் 4.50
மதுரை: இந்து நேசன் அச்சுக்கூடம் 1702
புதுப்பேட்டை சாலை 18

பயில்வான் ரங்க நாதன்லாம் எவ்வளவு நல்லவர்ன்னு இப்ப புரியுதா?

பின் குறிப்பு; (போட்டோவில் உள்ள செய்தியை படிக்க முயலாதீர்கள். ரொம்ப மோசமாக இருக்கும்)

– ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share