Seshu: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published On:

| By Manjula

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு (6௦) சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 26) காலமானார்.

‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சேஷு. சமீபகாலமாக திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக சந்தானத்தின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சேஷுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.

இதற்கிடையில் கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்தபோது சேஷுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது.  இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி சேஷு காலமானார்.

நாளை (மார்ச் 27) காலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. சேஷுவின் மறைவுச்செய்தி  திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தலுக்குப் பின் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்: உதயநிதி

பம்பரம் இல்லையென்றால் தீப்பெட்டி… துரை வைகோ திட்டம்!

Vettaiyan: டீசர் ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share