திமுக, அதிமுக, தவெக கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் – லோக்பால் அமைப்பின் கருத்து கணிப்பு விபரங்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

lokpoll

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என லோக்பால் என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் குறித்து லோக்பால் என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில், திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகள் வரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. மேலும், 40.1% வாக்குகளைப் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், அதிமுக கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் வெற்றி பெற்று, 29% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 8 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 23.9% வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சி 4.9% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. மற்ற கட்சிகள் 2.1% வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இவை லோக்பால் அமைப்பின் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள தகவல்கள் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share