’கூலி’ பட டப்பிங் முடிந்ததும் ரஜினி சொன்ன இரண்டு விஷயங்கள் : லோகேஷ் ஓபன் டாக்!

Published On:

| By christopher

lokesh shares rajini reaction after coolie dubbing

லியோ படத்தைத் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. ஆமீர்கான், சத்யராஜ், நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ந் தேதி உலமெங்கும் வெளியாக உள்ளது. lokesh shares rajini reaction after coolie dubbing

விரைவில் டிரைலர் மற்று இசை வெளியீட்டு நடைபெற உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.

ADVERTISEMENT

அப்போது, “முதன்முறையாக ரஜினி சாரை சந்தித்து, கூலி படத்தின் கதை பற்றி நான் சொல்லும்போது, ’நான் கமல் சார் ரசிகன்’ என்று எதார்த்தமாக சொல்லிவிட்டேன். அப்போது, அவர் எதுவும் சொல்லவில்லை.

கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்தபிறகு, எனது உதவி இயக்குநர்களிடம், “லோகேஷ் என்னிடம் கதையை சொல்லும் போது, ‘நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லிதான் என்கிட்ட கதையே சொன்னார். அவரை, நான் கூலி ஆடியோ லாஞ்சுல பாத்துக்குறேன்’ என்று ரஜினி சார் விளையாட்டாக சொல்லி விட்டு சென்றார்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் இன்னொரு நடிகரை ஏற்றுக்கொள்ள கூடாது என்றில்லை. என் அம்மாவிடம் ரஜினி சார் படம் பண்ண போகிறேன் என்று சொன்னதும், நீ சின்ன வயதில் ‘சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா’ பாட்டு இல்லாமல் சாப்பிடமாட்டே என்று சொன்னார்கள்.

ADVERTISEMENT

எங்கள் வீட்டில் என்னை தவிர மற்ற அனைவருமே ரஜினி ரசிகர்கள் தான். நானும் முத்து, படையப்பா வரை ரஜினி ரசிகன் தான். என்னைக்கு சத்யா படம் பார்த்தபின் கமல் சார் ரசிகனாக மாறிவிட்டேன். நான் கமல் ரசிகனான இருந்தும் ரஜினி சாருக்கு படம் பண்ணுவது கூடுதல் பொறுப்பு உணர்கிறேன்.

ஒரு விருது வழங்கும் விழாவில், கமல் சாரிடம், உங்களுடைய ரசிகன், உங்கள் நண்பர் ரஜினியை வைத்து படம் எடுக்கிறாரா என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு அவர், என்னுடைய ரசிகர் என்னுடைய நண்பரின் படத்தை இயக்குவதில் எனக்கு பெருமைதான் என சொல்லிவிட்டு, அதை சிறப்பாக செய்துவிட்டு என்னிடம் வாங்க என்றார். இதனால், அந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது” என்று லோகேஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “ரஜினி சாரின் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது தளபதி, நான் கூலியையும் அப்படிதான் எடுக்க வேண்டும் என முயன்றேன்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் ஸ்டுடியோவில் படத்தைப் பார்த்த பிறகு, ரஜினிகாந்த் என்னைக் கட்டிப்பிடித்து, ‘இது எனக்கு தளபதி மாதிரி இருந்தது” என கூறினார். அதை கேட்டதும் மிக சந்தோசப்பட்டேன். அந்த இரவுதான் நான் நன்றாக தூங்கினேன்” என லோகேஷ் தெரிவித்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share