Thalaivar 171: படத்தின் ‘டைட்டில்’ இதுதானா?… ரொம்ப ‘பழசா’ இருக்கே!

Published On:

| By Manjula

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171-வது படத்தின் டைட்டில் குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன.

முன்னதாக படத்தின் தலைப்பு வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்தநிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

ADVERTISEMENT

அதன்படி இப்படத்திற்கு கழுகு என பெயர் சூட்டப்போகிறார்களாம். ரஜினிகாந்த்-ரதி நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு கழுகு படம் வெளியானது.

ADVERTISEMENT

தொடர்ந்து கிருஷ்ணா-பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2௦12-ம் ஆண்டும் கழுகு என்ற தலைப்பில் படம் வெளியானது.

ஏற்கனவே இரண்டுமுறை இப்படத்தின் தலைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், செண்டிமெண்டாக மூன்றாவது முறையும் கழுகு படத்தின் தலைப்பு பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

ADVERTISEMENT

கமல் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த விக்ரம் படத்தின் தலைப்பும் கமல் நடிப்பில் ஏற்கனவே வெளியான படத்தின் தலைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சியால், அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே ரஜினி படத்தின் கதையை நிதானமாக லோகேஷ் எழுதி வருகிறார்.

ரஜினிகாந்த் வில்லனாக நடிக்கும் இப்படம் கடத்தலை மையமாகக் கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் கமல் ஹாசனை இயக்கிய விக்ரம் படத்தில் ‘ஆரம்பிக்கலாங்களா’ எனும் கேப்ஷனும், விஜயை இயக்கிய லியோ படத்தில் ‘பிளடி ஸ்வீட்’ என்ற கேப்ஷனும் இடம் பெற்றது.

அந்தவரிசையில் தலைவர் 171 படத்திலும் கேப்ஷன் இடம்பெறுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் என்ன செய்யப்போகிறார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Mrunal Thakur: தென்னிந்திய சென்ஷேசனலின் ‘சொத்து’ மதிப்பு இதுதான்!

Thug Life: ஜெயம் ரவி, துல்கருக்கு பதிலா யாரு நடிக்குறாங்கன்னு பாருங்க!

Rain Update: ‘ஜில்லென ஒரு மழைத்துளி’… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share