லோகேஷ் தயாரிக்கும் முதல் படம் ‘Fight Club’!

Published On:

| By christopher

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “G Squad” என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் படங்களை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று (நவம்பர் 28) “G Squad” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தில் உறியடி பட இயக்குனர் விஜய் குமார் & கேங் இடம்பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று G Squad நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

‘Fight Club’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் உறியடி விஜய் குமார் ஹீரோவாக நடிக்க, அப்பாஸ் ஏ ரஹ்மான் இந்த படத்தை இயக்கியுள்ளார். 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு சிக்ஸ் பேக்ஸ் உடன் விஜய் குமார் தனது கேங்குடன் மாஸாக நிற்கும் புகைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

அதிரடி ஆக்சன் படங்களை எடுத்து வெற்றிவாகை சூடியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது ’Fight Club’ என்ற செம மாஸான ஒரு ஆக்சன் படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

தனியாருக்கு செல்லும் காலை சிற்றுண்டி உணவு திட்டம்?: அன்புமணி கண்டனம்!

தனியாரிடம் காலை உணவுத் திட்டம்… முதல்வர் ஒப்புதல்?: டிடிவி தினகரன் கேள்வி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share