மாநகரம், வழக்கு எண் 18/9, வில் அம்பு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீராம். Lokesh Kanagaraj clarifies Sriram
கடந்த வாரம் அரை நிர்வாணமாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியான காட்சிகளை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சோஷியல் மீடியா முழுக்க நடிகர் ஸ்ரீ-யின் புகைப்படங்கள் தான் வைரலானது. அவருக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தநிலையில், நடிகர் ஸ்ரீராம் உடல்நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“நடிகர் ஸ்ரீராம் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருந்து விலகியுள்ளார்.
ஸ்ரீராம் மருத்துவ சிகிச்சையில் உள்ளதால், அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும், அவரது உடல்நலம் குறித்த வதந்திகள் அல்லது ஆதாரமில்லாத கருத்துக்கள் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், அவர் தொடர்பான ஆட்சேபனைக்குரிய நேர்காணல்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நேர்காணல்களில் சில நபர்கள் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிப்பதில்லை, அதை முற்றிலுமாக மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி” என்று தெரிவித்தார். Lokesh Kanagaraj clarifies Sriram
