சேலம் தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இறுதியாக திமுக சார்பில் போட்டியிட்ட செல்வகணபதி 5,66,085 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட விக்னேஷ் 4,95,728 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
செல்வகணபதி 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் விக்னேஷை தோற்கடித்தார். இந்த தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை 1,27,139 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், நாதக வேட்பாளர் மனோஜ் குமார் 76,207 வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
2019 தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை தோற்கடித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி : திமுக வெற்றி… பாமகவை பின்னுக்கு தள்ளிய நாதக!